ஆணுறை அவசியம்..! அபராதம் விதிக்கும் போலீஸ்..? புலம்பும் டிரைவர்கள்..!

388

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியன்று புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை அமல்படுத்தியது. ஏற்கனவே இருந்த அபராதத்தை காட்டிலும், தற்போது பல மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பலரும் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள டாக்சிகளில் போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு சோதனை செய்யும் போது, டாக்சிகளில் இருக்கும் முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து டிரைவர்கள் கூறும்போது, “ஆணுறை இல்லையென்றால் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தான் தெரியவில்லை.” என்று கூறினார்.

இதுகுறித்து வேறு சில ஓட்டுநர்கள் பேசும்போது, “விபத்து ஏற்படும் போது, ரத்த கசிவை கட்டுப்படுத்தவே ஆணுறைகள் தேவைப்படும்” என்று தெரிவித்தனர்.

இவ்வாறு டிரைவர்கள் புலம்புவது குறித்து போலீஸ் சிறப்பு ஆணையர் தாஜ் ஹசன் பேசும்போது, “மோட்டார் வாகனச்சட்டத்தில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இருக்கவேண்டும் என எந்த விதியும் இல்லை. நாங்கள் எந்த ஓட்டுநருக்கும் அபாரத ரசீது விதிக்கவும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of