“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

830

அதர்வா, தேவதர்ஷினி, ஜான் விஜய் ஆகியோர் நடிப்பில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியான திரைப்படம் செம போத ஆகாத. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த திரைப்படத்திற்கு, அதர்வா தனது சொந்த நிறுவனத்தில் தயாரித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி ரசிர்களிடையே போதிய வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இ.டி.சி. எக்டேரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை நடத்திவரும் தயாரிப்பாளர் மதியழகன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், செம போத ஆகாதே என்ற பெயரில் நடிகர் அதர்வா தயாரித்து நடித்த படத்தை வெளியிட, தம்மிடம் 5 கோடியே 59 லட்ச ரூபாய் பெற்று கொண்டு, அவுட்ரைட் ஒப்பந்தம் செய்ததாகவும், படம் வெளியிடுவதில் காலதாமதம் செய்ததால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நஷ்டத்திற்கு ஈடாக, தனது தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக, 45 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்ட பிறகு, அதர்வா தான் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறியதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதர்வா மீதான இந்த புகார் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of