காவலரின் மனைவிக்கு போனில் வந்த ஆபாச அழைப்பு..! புகாரை பெறாமல் அலைக்கழிப்பு..! பரபரப்பு வீடியோ..!

753

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக். இவர் அண்மையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்.,தனது மனைவியின் செல்போனுக்கு தவறான அழைப்புகள் வருவதாககூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோயம்பேட்டில் புகார் ஒன்றை அளித்தேன். ஆனால், இந்த புகாரை வாங்காமல் போலீசார் அலைக்கழித்து வருகின்றனர்.

மேலும், மனைவி மீது சந்தேகப்பட்டு இதுபோல் புகார் அளிப்பதாகக் கூறி என் மீதே வழக்குப்பதிவு செய்துவிடுவேன் என மிரட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, என்னையும் எனது மனைவி பற்றியும் தகாத வார்த்தைகளில் கொச்சையாக பேசுகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சக காவலருக்கே இந்த நிலை என்றால், காவல் நிலையங்களுக்கு செல்லும் சாதாரண மக்களின் நிலை கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of