போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடூரம்..! – வன்முறை கும்பல் செய்த வெறிச்செயல்..!

530

ராஜஸ்தானின் ராஜ்சமண்ட் மாவட்டத்தில் நேற்று ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கும்பல் வன்முறை சம்பவத்தில் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
குன்வாரியாவில் வசிக்கும் தலைமை கான்ஸ்டபிள் அப்துல் கனி. 48 வயதான இவர், நில தகராறு குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழக்கு தொடர்பாக அந்த கும்பலை விசாரணைக்கு அழைத்து வர அந்த இடத்திற்குச் சென்றிருந்தார். அப்போது வாக்குவாதம் முற்றியுள்ளது.. இதில் பயங்கர ஆயுதங்களை கொண்டு அந்த வன்முறை கும்பல் போலீஸ் கான்ஸ்டபிளை கடுமையாக தாக்கியது.

இதில் படுகாயமடைந்த அவரை ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்,ஆனால் இரத்தம் அதிகமாக வெளியேறியதால் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநில காவல் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய மூத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை சம்பவங்களில் ராஜஸ்தான் மாநிலம் தேசிய அளவில் தலைப்பு செய்திகளாக வருவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
கடந்த ஆண்டு ரக்பர் கான், என்ற 28 வயது இளைஞரை, கால்நடை கடத்தல் சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு . அவரை போலீசார் காவலில் எடுத்து பின்னர் காயங்களுடன் இறந்தார்.

இதே போன்று 2017 ஆம் ஆண்டில், மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு கால்நடை கண்காட்சியில் வாங்கிய மாடுகளை ஹரியானாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று கொண்டிருந்த பெஹ்லு கான் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். சாலையில் இரக்கமின்றி தாக்கப்பட்ட பெஹ்லு கான், பரிதாபமாக உயிரிழந்தார்.

பாஜக இந்த முறை மீண்டும் ஆட்சியில் அமர்ந்த 2 மாத காலத்தில் தப்ரேஸ் என்ற இளைஞர் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை சொல்லச் சொல்லி கடுமையாக தாக்கி பின்பு காவல்நிலையத்தில் மரணமடைந்தார்.

இப்படி கும்பல் வன்முறை அதிகரித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of