பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் காவலர்..! 5 வருடம் நடந்த கொடுமை..!

1052

மும்பை காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர், போய்வாடா காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், தன்னுடன் பணியாற்றி வந்த ஆண் காவலர், திருமணம் நடந்ததை மறைத்து, தன்னிடம் 5 ஆண்டுகள் வரை வாழ்க்கை நடத்தியதாகவும், அதனை தற்போது அறிந்துக் கொண்ட தான், அவரிடம் கேட்டதற்கு சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், அந்த ஆண் காவலர் மீது, பாலியல் வன்கொடுமை, உள்நோக்கத்தோடு அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement