புகார் அளிக்க வந்த பெண்..! காவல் நிலையத்தில் நடந்த கொடுமை..!

473

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அந்திவாடி பகுதியைச் சேர்ந்த சந்திரம்மா என்பவர் தனது சகோதரியின் நகைகளை அவரிடம் கொடுப்பதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை நோட்டமிட்ட கொள்ளையர்கள், சந்திரம்மா அசந்த நேரத்தில் பையில் வைத்திருந்த 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பையில் வைத்திருந்த நகைகள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரம்மா உடனடியாக இதுகுறித்து புகாரளிக்க ஓசூர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் மத்திகிரி போலீசாரிடம் புகாரளிக்குமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து மத்திகிரி காவல்நிலையத்திற்கு சென்ற சந்திரம்மாவை அவர்கள் மீண்டும் ஓசூர் காவல்நிலையத்திற்கு செல்லுமாறு அலைக்கழித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சந்திரம்மாவைக் கண்ட பொதுமக்கள் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ஓசூர் நகர போலீசார் சந்திரம்மாவின் புகாரைப் பெற்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of