சிலைகள் திருட்டு தொடர்பான 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் ஒப்படைக்கவில்லை

125
pon-manickavel

சிலைகள் திருட்டு தொடர்பான 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் ஒப்படைக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் இந்த மனுவை விரைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சிலை கடத்தல் தொடர்பான 50 வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறையினர் இன்னும் தங்களுக்கு தரவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ ஜி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, அனைத்து FIR அறிக்கைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தர வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here