பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்ததில் போலீஸ் சூப்பிரண்டு மீது தவறில்லை – பினராயி விஜயன்

159
pon-radhakrishnan-pinarayi-vijayan

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்ததில் போலீஸ் சூப்பிரண்டு மீது தவறில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள முதல்வர், சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பணியில் போலீசார் சரியான முறையில் நடந்து வருகிறார்கள் என்று கூறினார்,

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதுதான் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும் பொன். ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை என்று பினராயி விஜயன் தெரிவித்தார், தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டதால் தான் அவருடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதாகவும், இந்நிலையில் போலீசார் நடந்து கொண்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்,pon radhakrishnan

கேரளாவில் உள்ள போலீஸ் அதிகாரிகள், வெளி மாநிலத்தவர்கள் எனவே அவர்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்,

மேலும் சபரிமலை விவகாரத்தை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது ஒரு போதும் நடக்காது என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here