“ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ..” கலெக்டர் ஆபிஸ்..! பெண் போலீசிடம் கெஞ்சிய இளைஞர்..!

506

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண் போலீசுடன் பேசிக்கொண்டிருந்தார்.

சுமுகமாக அவர்களது பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த இளைஞர் தகராறு செய்ய தொடங்கி விட்டார். தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெண் போலீசிடம் அந்த இளைஞர் தகராறு செய்துக்கொண்டிருந்தார்.

இதையடுத்து பிற பெண் போலீஸ்கள் இருவருக்கும் சமாதானம் செய்து வைத்து, அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். வேலூர் மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற அந்த இளைஞரும் ஒரு போலீஸ் தானாம். அவர் ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வருகிறாராம்.

முதலில் இருவரும் காதல் செய்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு பிரபு மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்கிறார் என்று கூறி அந்த பெண் போலீஸ் பிரபுவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இந்த ஆத்திரத்தில்தான் நேராக கலெக்டர் ஆபீசுக்கே போய் டியூட்டியில் இருந்த பெண் போலீசிடம், தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரபு மிரட்டியும், கெஞ்சியும் உள்ளதாக கூறப்படுகிறது.

பணியில் இருந்த பெண் போலீசிடம், மற்றொரு போலீசே இவ்வாறு நடந்துக்கொண்டிருந்ததால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of