வீரப்பன் என்கவுண்டரில் பதக்கம் பெற்ற போலீஸ்! பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா?

723

சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜவகர் பீட்டர். இவர், 1997-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

இவர், 2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் சிறப்பு படையில் இடம்பெற்று இருந்தார். அந்த சமயத்தில் போலீசாரால் வீரப்பன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதால் சிறப்பு படையில் இடம்பெற்று இருந்த போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.3 லட்சம் ரொக்க பரிசு, பதக்கம், வீட்டுமனை மற்றும் பதவி உயர்வு வழங்கி கவுரவப்படுத்தினார்.

அதன்பிறகு இன்ஸ்பெக்டரான ஜவகர் பீட்டருக்கு இதுவரையிலும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு மேலாக டி.எஸ்.பி. பதவி உயர்வு கிடைக்காததால் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டார். ஆனாலும் அதற்கான எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் வெறுத்துப்போன ஜவகர் பீட்டர், தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும், போலீஸ் கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of