பிக்-பாஸ் வீட்டில் போலீஸ்..? வனிதா எடுத்த அதிரடி முடிவு..? அதிர்ச்சியில் ரூம் மேட்ஸ்!

1620

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவுக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் இடையே கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2012-ஆம் ஆண்டு பிரிந்தனர்.

மகள் ஜோவிதாவுடன் ஆனந்தராஜு தெலுங்கானாவில் வசித்து வந்தார். இந்நிலையில் மகள் ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் அனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்து, வனிதாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா போலீசார் நசரத்பேட்டை போலீசாரின் உதவியுடன், பிக்-பாஸ் நிகழ்ச்சி செட்டிற்குள் சென்று வனிதாவுடன் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு, தனது பாதுகாப்பில் உள்ள மகள் ஜெனிதாவை அழைத்து வர வனிதா விஜயக்குமார் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தெடர்ந்து மகளிடம், அப்பாவுடன் செல்ல விருப்பமா அல்லது அம்மாவுடன் செல்ல விருப்பமா என கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். குழந்தையின் விருப்பத்தை பொறுத்து அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ ஒப்படைக்கப்படும் என போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்-பாஸ் வீட்டிற்குள் போலீஸ் வந்ததால் ரூம் மேட்ஸ் அதிர்ச்சியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of