காவல்நிலையம் எதிரே..! பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..! காவலர் அரங்கேற்றிய கொடூரம்..!

707

தென்காசி மாவட்டம் தெற்கு கடையத்தை சேர்ந்தவர் ஹரி-ராம். இவருக்கு முப்பிடாதி சக்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரிந்துள்ளார்.

இதனால், முப்பிடாதி சக்தி கடையம் காவல் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தபோது, காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் தட்சனாமூர்த்தியிடம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முப்பிடாதி சக்திக்கு வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதையறிந்த காவலர் தட்சனாமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முப்பிடாதி சக்தியின் தலைப்பகுதியை குத்திவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் முப்பிடாதி சக்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் எதிரே காவலரால் பெண்ணுக்கு நடந்த கத்தி குத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of