Smart ஆக யோசித்த திருடர்கள் – அசால்டாக பிடித்த போலீஸ்

52922

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம்  தாட்சேப்பள்ளியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது.

கடந்த 26ஆம் தேதி இந்த வங்கியின் கீழ் தளத்தில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, 77 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தெலங்கானாவை சேர்ந்த பிரசாத், வினை ராமுலுவை ஆகிய இருவரையும் கைது செய்து பணத்தை மீட்டனர்.

காவல்துறையில் சிக்காமல் எப்படி கொள்ளை அடிப்பது என, youtube வீடியோவை பார்த்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக, கைது செய்யப்பட்ட இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Advertisement