“கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..” இதுக்குலாம் பைன் போட்ட போலீஸ்..! அதிர்ந்த வாகன ஓட்டி..!

321

மோட்டார் வாகனச்சட்டங்கள் தற்போது மிகவும் கடுமையாகி உள்ளது. ஒரு சிலர் அதிக அபராதங்களுக்கு அச்சம் அடைந்து, இந்த சாலை விதிகளை முறையாக பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் என்ன தான் சட்டம் இயற்றினாலும், தங்களின் இஷ்டத்துக்கு தான் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

ஆனால், இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தவறாக பயன்படுத்துவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு மக்களிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒரு வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது, இளைஞர் ஒருவர் எஞ்சின் இல்லாத பைக் ஒன்றை தள்ளிக்கொண்டு வருகிறார்.

அதனை பார்த்த அந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏன் ஹெல்மெட் போடலை என்று கேள்வி எழுப்பி, அபராதம் விதிக்க முயல்கிறார். இதற்கு உடனே அந்த இளைஞர் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இருசக்கர வாகனத்தில் எஞ்சின் இருந்தால் மட்டுமே மோட்டார் வாகன சட்டம் பொருத்தும் என்ற நிலையில் இப்படி எஞ்சின் இல்லாத வண்டிக்கு போலீசார் எப்படி அபராதம் விதித்தனர் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.