பெண்களை கடத்தி பாலியல் கொடுமை..! பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு நேரும் கொடூரம்..! “பேபி பேக்டரி..”

730

நைஜீரியாவின் லாகோஸ் என்ற பகுதியில் குழந்தை தொழிற்சாலை என்ற தொழில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகிறது. வேலை வாங்கித் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி அல்லது ஆட்களைக் கொண்டு கடத்தியும் இந்த இடங்களுக்கு பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

பின்னர் அந்த பெண்கள், பல ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவர்கள் கர்ப்பம் அடையும் வரை இந்த கொடுமைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. அவர்கள் கர்ப்பம் அடைந்த பிறகு, அனுபவமில்லாத நர்ஸ்களை வைத்து அந்த பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை கள்ளச்சந்தைகளுக்கு எடுத்து சென்று விற்று விடுகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு ஆயிரத்து 400 அமெரிக்க டாலர்களும், பெண் குழந்தைகளுக்கு 840 அமெரிக்க டாலர்களும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட பெண் ஒருவர், அங்கிருந்து தப்பி சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகே இந்த கொடுமை அணைவருக்கும் தெரியவந்துள்ளது. இந்த புகாரைத்தொடர்ந்து போலீசார், அந்த இடத்தில் ஆய்வு நடத்தி அங்கிருந்த பெண்களை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.