ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்!

71

ஒட்டன்சத்திரம் அருகே கருப்பணபுரத்தை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மனைவி கல்பனா இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்த கல்பனா தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்வதற்கு முயன்ற கல்பனாவை ரெயில்வே போலீசார் வடிவேல் மற்றும் சபீதா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.

மேலும் கல்பனாவின் தாய் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் கல்பனாவை ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசாரை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.