சொந்த வீட்டிலே திருட்டு.. வசமாய் சிக்கிய பிரபல சீரியல் நடிகை.. தேடி வரும் போலீஸ்..

746

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சுசித்ரா. இவர், சினிமா நடிகைகளுக்கு கார் டிரைவராக இருந்த மணிகண்டன் என்பவரை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

லாக்டவுன் காரணமாக, வருமானம் இல்லாமல் தவித்து வந்த தம்பதியினர், மணிகண்டனின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு, மணிகண்டனின் பெற்றோருடன், இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, அந்த வீட்டில் நிறைய பணம் மற்றும் நகைகளை பார்த்த சுசித்ரா, அவற்றை கொள்ளையடிப்பதற்கு மணிகண்டனிடம் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட மணிகண்டன், திட்டத்தின்படி, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தார்.

இதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, மணிகண்டன் தான் திருடினார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், மணிகண்டனை கைது செய்த போலீசார், சுசித்ராவை தேடி வருகின்றனர்.

Advertisement