சுதந்திர தின விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

265

சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில், ஈடுபட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லி முழுவதும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில், ஈடுபட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement