மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை பறித்த போலீசார் – மத்தியப்பிரதேசம்

371
Shivraj Singh Chouhan

மத்தியப்பிரதேசத்தில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் பெடுல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மாணவிகள் அணிந்திருந்த கருப்பு துப்பட்டாக்களை பறிமுதல் செய்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்துள்ளது. மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.