வீட்டில் இருந்த போதைப்பொருள்.. ஒத்துக்கொண்ட நடிகை.. பரபரப்பு வாக்குமூலம்..

2466

சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜீன் மாதம் 14-ஆம் தேதி அன்று, தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு நடிகைகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகிய 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இதற்கு முன்னதாக, நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் இருந்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அது தனக்கு ரியா கொடுத்தது என்றும், அதனை எடுத்துக்கொள்வதற்கு ரியா வருவதாக இருந்தது என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம், பாலிவுட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.