சோபியா வரும் 8 ஆம் தேதி ஆஜராக போலீசார் சம்மன்

468

பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்த மாணவி சோபியா வரும் 8 ஆம் தேதி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி கந்தன்காலணியை சேர்ந்த லூயிஸ் சோபியா என்ற மாணவி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அந்த விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பயணம் செய்தார்.

பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய அரசை விமர்சித்து மாணவி சோபியா கண்டன கோஷங்கள் எழுப்பினார். அப்போது தமிழிசைக்கும், சோபியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சோபியாவை, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சோபியா மீதான வழக்கை வாபஸ் பெறமாட்டேன் என்று தமிழிசை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவி சோபியா வரும் 8 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டுடன் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Advertisement