தமிழை இனி யார் “காப்பான்?” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்

535

கடலூர் மாவட்டம், புவனகிரியில் கல்லூரி மாணவர்கள் சிலர், பிரபல நடிகரின் திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், Band வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பின்னர், கல்லூரி மாணவர்களை கண்டித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து மாணவர்களின் கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர், மிகுந்த மனவருத்தத்துடன் அக்கடிதங்களை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், காவல் ஆய்வாளருக்கு, “ஆவ்யாறர்” என்றும், வசித்து வருகிறேன் என்பதற்கு “அசித்து வருகிறேன்” என்றும் கல்லூரி மாணவர்கள் எழுதியுள்ளனர். இதேபோல், பல எழுத்துப்பிழைகளும், இலக்கணப்பிழைகளும் இருப்பதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத காவலர் அம்பேத்கர், இந்த கல்லூரி மாணவர்களையும், இவர்களின் தமிழையும் இனி யார் “காப்பான்”? என்று வினவியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of