“ஆஃப்ரேசன் பனானா..,” வாழைப்பழத்தை வைத்து போலீஸ் செய்த அசத்தல் காரியம்..

475

ராஜஸ்தான் கங்காசாகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமையன்று பெண் ஒருவர் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு பேர், அந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

சங்கிலி திருடு போன சில மணி நேரங்களிலேயே, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிவேகமாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், அந்த இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்துள்ளனர். அந்த திருடர்களில் ஒருவன், திருடிய நகையை வாயில் போட்டு முழுங்கியுள்ளான்.

அந்த நகையை திரும்ப எப்படி பெறுவது என்று அருகில் இருந்த மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர். அதற்கு மருத்துவர்கள், ஒன்று ஆப்ரேசன் செய்யலாம் அல்லது மலம் கழிக்க வைத்து பொருளை எடுக்கலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதில் இரண்டாவது ஐடியாவை தேர்வு செய்த போலீஸ், அந்த திருடனுக்கு 2 டஜன் வாழைப்பழங்களையும், பப்பாளி பழங்களையும் கொடுத்துள்ளனர். அதை முழுங்க முடியாமல் தின்ற திருடன், இறுதியில் சங்கிலியை வெளியேற்றினான். சங்கிலியை பெறுவதற்கு போலீசார் செய்த இந்த செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of