“சாவிய கொடுடா..” ஆபாச வார்த்தைகளால் திட்டிய காவலர்.. வைரல் வீடியோ!!

542

ஓசூரில் குடிபோதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் சாவியை பறித்து ஆபாசமாக பேசும் காவலர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் விநாயக மூர்த்தி என்பவர் ரிங் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரின் வாகனத்தை நிறுத்திய காவலர், சாவியை தரும்படி கேட்டுள்ளார். வாகன ஓட்டி சாவியை தர மறுக்கவே தலைமுடியை இறுக்கி பிடித்து மிரட்டி கேட்கிறார்.

பின்னர் காவலரே கையில் இருந்த சாவியை பிடுங்கி, அந்த நபரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement