“என் அண்ணி எவ்வளவு அழகாக இருக்காங்க பாரு..” மனைவிக்கு காவலர் சித்ரவதை..! இறுதியில் நேர்ந்த சோகம்..!

551

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள். போலீசில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வரும் இவருக்கும், ராஜேஸ்வரி என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி அன்று ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், அருள் தனது அண்ணியிடம் சேர்ந்துக்கொண்டு, என் அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார்.. பார் எனக் கூறியும், ஆபாச படங்களை காண்பித்தும் சித்ரவதை செய்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போதே, தனது அக்கா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. எனவே தனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவணன் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

அதன்பேரில் பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of