இன்று போலியோ சொட்டுமருந்து முகாம் – தமிழகம் முழுவதும் மொத்தம் எத்தனை மையங்கள்?

116

போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. போலியோ ஒழிக்கப்பட்டாலும் தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகம் முழுக்க 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எல்லோருக்கும் போலியோ மருந்து அளிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அதேபோல் 1000க்கும் அதிகமான நடமாடும் சுகாதார மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.

இந்த வருடம் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.