போலியோ சொட்டு மருந்து முகாம் 10-3-2019

482
polio8.3.19

தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அன்றைய தினம் 5 வயதிற்குட்பட்ட 70 ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு 549 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் 86 பள்ளிகளில் நடைபெறும். மேலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் நடமாடும் முகாம்கள் என 26 இடங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of