பாராளுமன்ற தேர்தல்! அரசியல் பிரபலங்கள் வாக்குப்பதிவு!

229

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தற்போதைய தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைய போகிறது. ஒட்டு மொத்த வாக்காளர்களும் தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர்.

ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of