அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றனர் – வாட்ஸ்-அப் நிறுவனம்

628

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புவதாக வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு வாட்ஸ்-அப் செய்திகளில் பரவிய வதந்தியால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வதந்திகளை தடுக்க வாட்ஸ்-அப் நிறுவனம் சில அம்சங்களை அறிமுகப்படுத்தியது.

இருப்பினும் வாட்ஸ்-அப் வழியாக வதந்திகள் மற்றும் தவறான செய்திகள் பரப்பப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புவதாக வாட்ஸ்-அப் நிறுவனம் பரபரப்பை குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

இருப்பினும் எந்த கட்சிகள் தவறான செய்திகளை பரப்புகின்றன எந்தவிதமான செய்திகளை பரப்புகின்றன என்பது குறித்து வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவிக்கவில்லை.