இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா

465

நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிய நிலையில் அங்கு அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங், இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை எதிர்கொள்ளும் திறமை அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகவும் கூறினார்.

எனவே அங்கு விரைவில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.