பொள்ளாச்சி விவகாரம் – தொடர் போராட்டம் எதிரொலியால் கல்லூரிகளுக்கு விடுமுறை

656

 

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொள்ளாச்சியில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் வன்கொடுமை செய்த அனைவரையும் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகத்தின் வெளியே திரண்ட மாணவ, மாணவிகள், பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்ட உரிய நபர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காத, காவல் துறையினரையும், தமிழக அரசையும் கண்டித்து முழக்கமிட்டவர்கள், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை தூக்கிலிட வேண்டும். பெண்களை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்று கண்டன பதாகைகளுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

பொள்ளாச்சியில் நேற்று மாணவ, மாணவிகளின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of