பொள்ளாச்சி கும்பலிடம் அந்த இளம்பெண் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? – மனதை நொருங்க வைத்த நிமிடம் -சிறப்பு தொகுப்பு

904

மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து 3  நாட்களுக்குள்ளாகவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது பொள்ளாச்சி கொடூர சம்பவம்..


”அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்க” என்ற கதறல் சப்தம் இன்னமும் மனதை பதைபதைக்காமல் இல்லை.

அவளின் கெஞ்சலும்,கதறலும் அந்த வக்கிரப்புத்திக்கும்பலுக்கு காதில் விழுந்தபாடில்லை. தான் நினைத்த காரியங்களை சாதிக்கிறது. பெல்ட்டால் அடித்து ஆடையை கழட்ட வைக்கிறது அந்த கொடூர மிருகங்கள்.

ஒன்றா?இரண்டா? சுமார் 200 க்கும் அதிகமான பெண்களை தனது வலையில் விழ வைத்து காரியத்தை சாதித்திருக்கிறது அந்த காமப்பசி கும்பல். கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதை முழு நேர வேலையாகவே பார்த்திருக்கிறது அந்த பொள்ளாச்சி கும்பல்.

சமூக வலைதளங்களில் அதிகமான நேரத்தை செலவளிக்கும் பெண்களே இவர்களின் முதல் டார்கெட்.
உறவுக்கார பெண்களிலிருந்து, நண்பர்களின் சகோதரிகள் என அவர்களுக்கு நெருங்கியவர்களின் ஒருவரையும் மிச்சம் வைக்கவில்லை.

thiru family
முகநூலில் உன்னை காதலிக்கிறேன், திருமணம் செய்துகொள்கிறேன் என அன்பாய் பேசி நெருங்கிப்பழகி தனது முதற்கட்ட வலையை வீசுகிறது. பிறகு அந்த வலைகளுக்கு ஏறத்தாழ அனைத்து பெண்களும் விழவே அவர்களை நைசாக பேசி பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு வரவழைக்கிறது.

அதன் பிறகு தான் அந்த அபலப்பெண்களுக்கு தெரிகிறது ஏதோ தவறு நடக்கிறதென்று…

பெண்கள் பெயரில் ஃபேக் ஐடிகளை தயார் செய்து அதன் மூலமும் பெண்களை வலையில் விழவைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது அந்த அயோக்கியக்கும்பல்..

அந்த கும்பலில் எவன் பெண்ணை வலைத்துப்போட்டு வரவழைக்கிறானோ அவனிடம் அந்த பெண் கதறி கேட்ட ஒரு கேள்வி “உன்னை நம்பி தானே வந்தேன்” என்னை இதற்காகவா வரசொன்னாய்?  என்றவுடன் அந்த கும்பலின் வெறித்தனம் தொடங்குகிறது.

அதில் ஒருவன் பெல்ட்டை கழட்டி அந்த பெண்ணை கடுமையாக தாக்குகிறான். வலி தாங்கமுடியாமல், ”அண்ணா லெக்கின கழட்டுறேன் பெல்ட்டால அடிக்காதீங்க” என பாவப்பட்ட கதறலுடன் கூறுகிறாள் அந்த இளம்பெண்.

இது வெறும் 2 நிமிடம் காணொலி தான். ஆனால் இன்னும் 1500 வீடியோக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது காவல்துறை தரப்பில்..

அந்த வீடியோக்களை வைத்து பணம் பறித்தும் பணம் இல்லாத பெண்களை மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது அந்த வக்கிரம கும்பல்..
இத்தனை வரிகளை எழுதும் பொழுது என் கண்கள் குளமாகாமல் இல்லை.

கண்ணீருடன் எழுதிய வரிகள் மனதை இன்னும் ரணமாக்கிறது.

மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் நவீன மயமாகும் இந்த காலக்கட்டத்தில் மனித சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லி மாளாது.

ஆண்களை விட பெண்களின் ஈடுபாடு சமூக வலைதளங்களில் அதிகமாக இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதே வேளையில் சுதந்திரமாய் முன்னேற முயற்சிக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த சம்பவம் ஒரு தடைக்கற்களாக பார்க்கப்படாமல் இல்லை.

Image result for girl gang rape shadow images
சமூக வலைதளங்களில் இளம்பெண்கள்,மாணவிகள் என அதிகமாக உலா வருவோர்,அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த சம்பவத்தின் மூலம் நாம் உணரப்படுவது.
பெண்களின் பாதுகாப்பு என்பது நம்முடைய முன்னெச்சரிக்கையே முதல் பாதுகாப்பாய் அமையும்.

இந்த சமூகத்தில் வக்கிரம புத்திக்கொண்ட ஒரு சில ஆண் மிருகங்களால் ஒட்டுமொத்த ஆண்களிடமும் பாதுகாப்பு உணர்வு இல்லாமல் போய்விட்டது.
காமம் என்பதை தாண்டி அந்த வீடியோக்களின் மூலம் பணம் பறிக்கும் அந்த கும்பல் அதையே முக்கிய தொழிலாக வைத்திருந்திருக்கிறது.

Related image
இந்த கும்பலுக்கு பின்புலமாக ஆளுங்கட்சியின் பிரமுகர்களின் பெயரும் அடிபடுகிறது.
அதனாலேயே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த பொள்ளாச்சி சம்பவம் ஒவ்வொரு மனித மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
ஆளுங்கட்சியின் பெயர் அடிப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தை இழுத்துமூடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதுவாயினும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒருமித்த குரலில் ஒன்றிணைய வேண்டும்.

அந்த அரக்கர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை சமூகத்தில் இனி எவனும் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபடாத வண்ணம் இருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய அச்ச உணர்வைப் போக்கி அவர்களுக்கு சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி, பொள்ளாச்சி ஈனக்கும்பலைப் போல இன்னொரு கும்பல் உருவாகும் சூழலை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்..

காதல் என்ற சொல்லில் காமம் என்னும் ஆயுதம் ஏந்தி அதை வக்கிரமாக வீசும் கும்பலை வேரோடு சாய்ப்போம்.. பெண்களின் பாதுகாப்பிற்காக கரங்களை வலுசேர்ப்போம்…

-எழுதுகோல் கர்ஜனை