பொள்ளாச்சி எதிரொளி: தமிழகம் முழுவதும் கொதித்தெழும் மாணவர்கள்

411

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டனர். வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டம் நடத்திய மாணவர்கள், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.