பொள்ளாச்சி எதிரோலி: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

360

இந்தியா முழுவதும் ஒளிக்கும் ஒரே குறல் பொள்ளாச்சி வன்கொடுமை தான். இளம் பெண்கள் காதல் வலையில் விழவைத்து அதன் மூலம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 காம ஆசாமிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகின்றது.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் அவர்கள் படிக்கும் கல்லூரி பெயர்கள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டனர்.

பாதிக்கப்பட்டவரின் விபரங்களை வெளியிட்டதற்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்காக புதிய அரசாணையைவெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று காலை உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரின் விபரங்களை வெளியிட்டதற்காக, தமிழக அரசு அந்த பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கதமிழக அரசுக்கு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண்ணின் விபரத்தை வெளியிட்ட கோவை காவலதிகாரி மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of