எங்கள யாராலும் தடுக்கு முடியாது.., நிச்சயம் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்துவோம்.., கனிமொழி சவால்!

399

மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து 3 நாட்களுக்குள்ளாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த நாட்டிற்கே வெளிச்சம் போட்டு காட்டியது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தான்.

அப்பாவி பெண்களை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. ஆனால் இந்த போராட்டத்திற்கு தற்போது வரை போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

தேர்தலை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி கூறுகையில்,

இந்த பாலியல் கும்பலால் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. சிறிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதை உடனே விசாரிக்க வேண்டும்.இவர்களுக்கு பின் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இத்தனை பெண்களை மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு பின் பெரிய நெட்வொர்க் இருந்துள்ளது. அதற்கு பின் அதிமுக தொடர்பு இருக்கிறது. அதில் ஒருவர் தான் இந்த பார் நாகராஜன்.

அவரை இப்போது அவசர அவசரமாக அதிமுக நீக்கி இருக்கிறது. இதில் அரசியல் தொடர்பு இருப்பதால் தான் போலீஸாரும் விசாரிக்க பயப்படுகின்றன.
இது ஊடகங்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். இதில் போலீஸ் யாரையோ காப்பாற்ற முயல்கிறது.

எங்களுக்கு பொள்ளாச்சியில் போராட அனுமதி மறுத்து இருக்கிறார்கள். தேர்தல் என்பது பொய் காரணம்தான். அரசு மக்களை நினைத்து பயப்படுகிறார்கள். நாங்கள் போராடுவது உறுதி. தடையை மீறி நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று, கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of