பொள்ளாச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய கனிமொழி கைது!

235

மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து 3 நாட்களுக்குள்ளாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த நாட்டிற்கே வெளிச்சம் போட்டு காட்டியது பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தான்.அப்பாவி பெண்களை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த பாலியல் கும்பலால் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

. எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. சிறிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இதை உடனே விசாரிக்க வேண்டும்.இவர்களுக்கு பின் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இத்தனை பெண்களை மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு பின் பெரிய நெட்வொர்க் இருந்துள்ளது. அதற்கு பின் அதிமுக தொடர்பு இருக்கிறது. அதில் ஒருவர் தான் இந்த பார் நாகராஜன்.அவரை இப்போது அவசர அவசரமாக அதிமுக நீக்கி இருக்கிறது. இதில் அரசியல் தொடர்பு இருப்பதால் தான் போலீஸாரும் விசாரிக்க பயப்படுகின்றன.இது ஊடகங்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். இதில் போலீஸ் யாரையோ காப்பாற்ற முயல்கிறது.

எங்களுக்கு பொள்ளாச்சியில் போராட அனுமதி மறுத்து இருக்கிறார்கள். தேர்தல் என்பது பொய் காரணம்தான். அரசு மக்களை நினைத்து பயப்படுகிறார்கள். கடைசி வரை போலீஸ் இந்த போராட்டத்திற்கு அனுமதிவழங்கவில்லை என்றாலும் தடையை மீறி போராட்டத்தை தொடங்கினார் கனிமொழி.இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் போலீஸார் கனிமொழியை கைது செய்தனர்.