பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம் – ஒரு பெண்ணுக்கும் தொடர்பு?

355

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திரு நாவுக்கரசுக்கு ஒரு பெண் உதவி செய்ததாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வக்கிரப்புத்தி கொண்ட அரக்கர்களை காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறது. தற்பொழுது இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஒரு பெண் திரு நாவுக்கரசுக்கு உதவி செய்ததாகவும் அவன் தலைமறைவாக இருந்தபொழுது பல்வேறு ஊர்களுக்கு அந்த பெண் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த பெண் யார் என்பது குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இளம்பெண்களை நாசமாக்கிய கும்பலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.