பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்! அரசாணை வெளியீடு!

205

பேஸ்புக் மூலம் நண்பர்களாகி, அவர்களுடன் ஆசை வார்த்தை பேசி மயக்கி அவர்களைய தவறுதலாக வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி வந்தது.

இவர்களின் வலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிந்து உள்ளனர். இவர்களின் இந்த செயல் பல வருடங்களாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த செயல் தற்போது, வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்த வழக்கு, சிபிசிஐடி அதிகாரிகளிடம் விசாரணைக்கு மாற்றப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.