பொள்ளாச்சி எதிரொலி: சிறையிலும் இவர்களுக்கு எதிராக சக கைதிகள் போராட்டம்

397

நாட்டையே உலுக்கிபோட்ட பொள்ளாச்சி இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டள்ளனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுபவரை அடைக்கும் அறையில் அடைக்கக் கோரி சக கைதிகள் போராட்டம் நடத்தின.

இதனால் சிறிது நேரம் சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, தாக்குதல் சம்பவத்தை தவிர்க்க, சிறைக்காவலர்கள் போராட்டம் நடத்தும் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சக கைதிகளிடம் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் 3 கைதிகளும் வேறு சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று அளிக்கப்பட்ட உத்தரவை அடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.