பொள்ளாச்சி விவகாரம்- ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

589

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆம் ஆத்மி  கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ள அக்கிரமங்களை தடுக்காத அதிமுக அரசை கண்டித்தும் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய கோரியும்,

சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த விசாரணையை பாரபட்சமின்றி விரைந்து நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கைகள் எடுத்திட வலியுறுத்தி நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று 13/3/2019 மாலை 4 மணிக்கு ஆம்ஆத்மிகட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் “திரு.வசீகரன்” தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இதில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு நம் சகோதரிகளை சிரழித்த காம கொடூரர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement