பொள்ளாச்சி கொடூரத்தில் புதிய வீடியோவில் பார் நாகராஜ் உண்மையா?

1002

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வக்கிரக்கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான பார் நாகராஜ் இருப்பதாக ஒரு ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட குற்றவாளி சதீஷ்

அதிமுக-வைச் சேர்ந்த பிரமுகரான பார் நாகராஜ் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்த கும்பலுக்கு எதிராக புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கி ஜாமீனில் வெளியே வந்தான். இந்த நிலையில் இந்த வழக்கில் பார் நாகராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த வீடியோவில் இருப்பது கைது செய்யப்பட்ட சதீஷ் என என்பது தெரியவந்துள்ளது..

சதீஷ் பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து ரகசியமாக வீடியோ எடுத்துள்ளான். அந்த வீடியோ தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு சில வீடியோ முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பார் நாகராஜ் தலைமறைவாக இருப்பதாகவும், போலிசார் அவனை கைது செய்யத் தயங்குவதாகவும் தெரிகிறது. ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் அவன் மீது நடவடிக்கையில் மெத்தனப்போக்கோடு செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

முதற்கட்டாக கைது செய்யப்பட்ட இந்த வழக்கில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுக எம் எல் ஏ ஜெயராமன் மகனும் இதில் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஜெயராமன் முற்றிலும் மறுத்துவிட்டார்.

முன்னதாக SP பாண்டியாரஜன் இந்த வழக்கில் இந்த 4 பேர் மட்டும் தான் தொடர்பு என்றும் வீடியோக்கள் எதையும் வெளியிடவில்லை என்றும், எம்.எல்,ஏ ஜெயராமனுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என முந்திக்கொண்டு பேட்டியளித்தார். விசாரணை தொடங்குவதற்கு முன்பே எப்படி இவர் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என கூற முடியும் என அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர். இதில் காவல்துறை அதிகாரி என்ற அடிப்படையில் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து நேர்மையாக செயல்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனவே இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான பார் நாகராஜை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of