தமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு

543

தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல் தனது பணிக்காலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திருடு போன ஆயிரக்கணக்கான சிலைகளை மீட்டார் என்பது தெரிந்ததே. ஓய்வுக்கு பின்னும் நீதிமன்ற உத்தரவால் அந்த பணியை தொடர்ந்து வரும் பொன்.மாணிக்கவேல், தற்போது தமிழக அரசின் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிலை பாதுகாப்பு மையம் அமைக்க இதுவரை தமிழக அரசு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என்றும், மாதம் ஒரு மையம் கட்டினால் கூட 16 மையங்களை இதுவரை கட்டி முடித்திருக்கலாம் என்றும் அரியலூர் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் ஆய்வுக்கு பின் பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் மீது அவரது துறையினர்களே பல்வேறு குற்றஞ்ச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of