டிடிவி. தினகரன் கூட்டணிக்கு அலைவது சொத்தை கத்திரிக்காயை விற்பது போன்று உள்ளது

375
pon-radhakrishnan-TTV

டி.டி.வி. தினகரன், கூட்டணிக்கு அலைவது, சொத்தை கத்திரிக்காயை கூவி கூவி விற்பது போன்று உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜூரம் அதிகமாகி வருவதாக தெரிவித்தார். மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்துவதோடு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், வரம்பு மீறி கொச்சையாக பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை என்றும் கூறினார்.