பொய் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் தோல்வி அடையும்

912

ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, இதுவே அவர்கள் தோல்வி அடைய முழு காரணமாக அமையும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நூலகம் மற்றும் காணொளிக் காட்சியகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முதல்வர் உட்கட்சிப் பூசலைப் பேச டெல்லி செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், பிரதமர் மோடி நலத் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான சந்திப்பு தான் முதல்வர், பிரதமர் சந்திப்பு என தெரிவித்தார்.

பாஜக திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை தள்ளிப் போட எந்த முயற்சியும் எடுக்க வில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

ரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைய முழுக் காரணமாக அமையும் என அவர் தெரிவித்தார்.

Advertisement