கமல் சொல்ற ‘A’ சினிமா சர்ட்டிபிகட்டா? – கமலை கலாய்த்த பொன்னார்

511

மக்கள் நீதி மய்யம் சார்பில் நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் நாங்கள் யாருக்கும் ‘பி’ டீம் அல்ல, நாங்கள் ஏ டீம் என்று கூறினார்.
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று பேட்டி அளித்தார்.

அப்போது, தாங்கள் பாஜக கூட்டணியில் பி டீம் இல்லை. தமிழகத்தில் நாங்கள் தான் ஏ அணி என்று கமல் கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பொன்னார், சினிமாவில்தான் ஏ சர்டிபிகேட், யு சர்டிபிகேட் என்று இருக்கும். கமல் தங்களை ஏ அணி என்று எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி யு சர்டிபிகேட் கூட்டணி, அதாவது தமிழக குடும்பங்களின் கூட்டணி என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of