சிறைச்சாலை சொகுசு வாழ்க்கை : சட்ட அமைச்சர் கருத்துக்கு பொன். இராதாகிருஷ்ணன் கண்டனம்

774

சிறை சாலைகளில் முதல் வகுப்பில் டிவி உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து இருப்பதாக தெரிவித்த தமிழக சட்ட அமைச்சர் சண்முகத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிறை சாலைகளில் இதுபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால் நாம் வெளியில் இருந்து கஷ்டப்பட தேவையில்லை என்றும், உள்ளே சென்று சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்தை மக்களுக்கு உருவாக்கும் என தெரிவித்தார்.

மேலும், சட்ட அமைச்சரின் இதுபோன்ற பேச்சு கொலை கொள்ளையை அதிகரிக்கும். எனவே சட்ட அமைச்சர் சண்முகம் தனது கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறித்தியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of