குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

444
puducherry

குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, துணைவேந்தரை கண்டித்து புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மதத்தை உயர்த்தியும், மற்ற மதங்களை குறைவாக சித்தரித்தும் பதாகைகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு துணைவேந்தர் ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் துணைவேந்தரை கண்டித்து பல்கலைக்கழக மானவ- மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்புக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதாகவும், மற்ற மாணவர் அமைப்பினருக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர், நேற்று இரவு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.