பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

804

மாட்டுப் பொங்கல் தைப்பொங்கல் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் அவற்றுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினையும் மாடுகளையும் சுத்தம் செய்யும் விவசாயிகள் மாடுகளின் கொம்புகளில் வண்ணம் பூசி கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.

மேலும் தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி மாடுகளுக்கு பொங்கல், பழம் என அனைத்தையும் உண்ண கொடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து மகிழ்வார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of