பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் பேருந்து முன்பதிவு இன்று முதல் துவக்கம்

284

அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது.

எனவே, அரசு விரைப்பேருந்துகளில் சொந்த ஊர் செல்லும் மக்கள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.பெருந்தொற்று காரணமாக தற்போது 800 அரசு விரைவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு 100% இருக்கையில் பயணம் மேற்க்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

இதனால் தேவைக்கு ஏற்றவாறு கூடுதலாக பேருந்துகளை இயக்கலாம் என போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது

Advertisement