பொங்கல் பரிசை அறிவித்த முதலமைச்சர்..! இந்த முறை கூடுதல் பணம்..!

1846

சேலம் மாவட்டம் இருப்பாளியில் முதலமைச்சர் பழனிச்சாமி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றிய அவர், ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஜனவரி 4-ஆம் தேதி முதல், வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சென்ற ஆண்டு, ரூபாய் ஆயிரம் மட்டுமே வழங்கிய நிலையில், இந்த முறை 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement